Pages

Saturday, November 13, 2010

சிலருக்குத் தோல் எண்ணெய்ப் பசையாக இருக்கும். இதனால் ஆண் பெண் இருவருக்கும் முகத்தில் பரு தோன்றும். கூடுதலாக எண்ணெய்ச்சுரப்பி சுரப்பதனால், இந்த எண்ணெய்மயிர்க்கால் வழியாக வெளிவரும்போது தடைப்பட்டு முகப்பரு வடிவாக உருவெடுக்கும்.



முகத்திலுள்ள எண்ணெய்பசையை நீக்கும் வழிமுறைகள்

1 தேக்கரண்டி வெள்ளரிக்காய்ச் சாறு
½ தேக்கரண்டி தேசிப்புளி
3 துளிகள் Rose water
இவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பரவிப் பூசி 15 நிமிடங்கள் விட்டுப் பின் நன்றாகக் கழுவுங்கள். பலன் கிடைக்கும். கவலைப்படத் தேவையில்லை.

முறை 2:

1 தேக்கரண்டி கடலைமா
2 தேக்கரண்டி வெள்ளரிச்சாறு


இவற்றை ஒன்றாகக் கலந்து கண், வாய் போன்ற பகுதிகளைத் தவிர்த்து முகத்தில் பரவப் பூசுங்கள். அதன் பின் 15 நிமிடங்கள் கழித்துச் சிறிளவு கைச்சூடான நீரால் கழுவுங்கள். எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும். 

பொதுவாகக் கவனிக்க வேண்டியது.

உடற்பயிற்சி உடலுக்கும் முகத்துக்கும் எப்போதும் சிறப்பத் தரும். வியர்வை மூலம் அழுக்குகள் வெளியேற்றப்படுகின்றது, மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது.


முகப்பவுடர், முகத்திற்குப் பூசுகின்ற கிரீம், பூச்சுக்கள், முகம் கழுவும் சவர்க்காரநீர், போன்றவற்றை அளவாகப் பயன்படுத்த வேண்டும். 


முகத்தை ஒவ்வொருநாளும் 3,4 முறைகள் கழுவ வேண்டும்.

Thursday, November 11, 2010

வல்லாரை

                                வல்லாரை


வல்லாரை கண்டீரோ. அதன் மகத்துவம் புரிந்தீரோ - மூளை
வல்லாரெல்லாம் சொல்லிச் சொல்லி உண்ணும்
வல்லமை யுணவு இவ்வால்லாரை தானன்றோ.


                            


இயற்கையே எமக்குத் தகுந்த உணவுகளையும் மருந்து வகைகளையும் இலவசமாகத் தந்திருக்கின்றது. அவற்றை நாம் தேடிப்பெற்று அநுபவிக்கத் தயங்கக் கூடாது. நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் முண்டரிகபரணி, சரஸ்வதி ஆகு, யோசனைவல்லி என்றேல்லாம் பெயர் பெறுகின்ற வல்லாரையை
France  நாட்டினர் சூப்புச் செய்வதற்குப் பயன்படுத்துகின்றார்கள்.






சிறப்பு:


நரம்புகளுக்கு வலிமை தருகிறது.
தோல்நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
குடல் புண்ணை ஆற்றுகின்றது.
நீர்க்கடுப்புக்கு மருந்தாக அமைகின்றது.
கண் எரிச்சலைக் குணமாக்குகின்றது.
குஸ்டரோகம் ஆரம்பத்தில் சாற்றைப் பூச வேண்டும். அதன் முடிச்சுகளை அகற்றக்கூடியது என Dr.Hunter  கூறியிருக்கின்றார்.

 நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. 
 இரத்தசுத்தி செய்யும் தன்மையுள்ளது.
 பல்லிலேயுள்ள மஞ்சள் நிறம் மறைய 30, 40 நாள்கள் பச்சையாக எடுத்துத் தேய்த்தல் வேண்டும்.
 மனநோய்களுக்கு மருந்தாகவும் காணப்படும். 


அதிகமாக் சாப்பிட்டால்:

தலைச்சுற்று ஏற்படும்
மயக்கம் ஏற்படும்
உடம்பெல்லாம் வலியாக இருக்கும்.

இவ்வல்லாரையை வாரத்திற்கு இரண்டு முறை பாவித்தால் போதுமானது.


வல்லாரை இலை 150 கிராம் வசம்பு 15 கிராம் எடுத்து இவற்றைப் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும். மந்தபுத்தி நீங்கும்.


உண்ணும் முறை:


1. வல்லாரை, வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ, உப்பு, தேசிப்புளி இவற்றை ஒன்றாக எடுத்து பச்சடி போல் அரைத்துச் சாப்பிடலாம்.
2. வல்லாரையை சிறிதுசிறிதாக அரிந்து அத்துடன் தக்காளிப் பழத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சிறிதுசிறிது துண்டுகளாக நறுக்கி அத்துடன் சேர்த்து உப்பு, தேசிப்புளி கலந்து உண்ணலாம்.
3. உறைப்பை விரும்பாதவர்கள் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவையில்லை.

Wednesday, November 10, 2010

சருமம் அழகு பெற

                                                                         தோல்



எமது உடலின் பல்வேறுபட்ட உறுப்புக்களையும் போர்த்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பரப்பளவுள்ள ஒரு பகுதி தோல் ஆகும். இத்தோலின் தடிப்பு 1 மி.மீற்றர். மேல்த்தோல் 4 அடுக்குகளையுடையது. மெலனின் அளவைப் பொருத்துத்தான் தோலின் நிறம் ஒவ்வொருவருக்கும் அமைகின்றது. மெலனின் அதிகம் சுரப்பவர்கள் கறுப்பு நிறம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். தொடுகை உணர்வு, உடல் வெப்பநிலையைப் பாதுகாத்தல், விற்றமின் D ஐத் தொகுத்தல்,  விற்றமின் B ஐப் பாதுகாத்தல் போன்ற தொழிற்பாடுகளைத் தோலானது செய்கின்றது. தோலிலே எண்ணெய்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இந்த எண்ணெய்ச் சுரப்பிகள் ஒவ்வொரு மயிர்க்கால்களுக்கும் தோலுக்கும் எண்ணெயைத் தருகின்றது. இது தோல் காய்ந்து போகாமல் பளபளப்பாக இருக்க உதவுகின்றது. தோல் அழகாக இருந்தால் உடலும் முகமும் பொலிவாகத் தெரியும் அல்லவா!


முகம் பளிச் என்று இருப்பதற்கு:


சிறிதளவு கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுங்கள் அதற்குள் 2, 3 சொட்டு எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து விடுங்கள். இந்தக் கலவையினுள் சிறிதளவு பால் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பரவலாகப் பூசிக் காயவிடுங்கள். நன்றாகக் காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவுங்கள். முகம் பளிச்சென்று இருக்கும்.


இதேபோல் பயற்றம் மாவை நீரில் அல்லது பாலில் குழைத்து உடலில் தேய்த்துக் குளித்து வர உடல் பொலிவு பெறும்.


முகத்துக்கு எலுமிச்சம் பழச்சாற்றைத் தினமும் பூசி வருகின்ற போது முகத்தில் வளருகின்ற தேவையற்ற முடிகள் நீக்கப்படும்.


கூர்க்கனை வெட்டி அதன் சாற்றை முகத்தில் பூசி வர முகம் குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்.


இவை எல்லாவற்றிற்கும் முன்னோடியாக முகத்தை அடிக்கடிக் கழுவித் துப்பரவாக வைத்திருப்பது அவசியம். இன்று இது போதும் என்று நினைக்கின்றேன். தொடர்ந்து மேலும் தகவல்களை உங்கள் ஆதரவோடு தொடர்கின்றேன்.

அறிமுகம்





md;G thrfHfNs!               



உலகம் தன் வளர்ச்சிப் போக்கை துரிதப்படுத்தியுள்ளது. அழகும் அறிவும் அதிவேகமாக முட்டி மோதி உலகில் முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன. அழகை மேம்படுத்துவதற்காக மக்கள் எல்லோரும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். யாருக்குத்தான் தான் அழகான இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. பருவமாற்றம் கண்ட பெண்கள் தம்முடைய முகச் சுருக்கங்கள் மறைப்பதற்குப் பலவிதமான முகப்பூச்சுக்களை நாடிவிட்டார்கள். இந்நிலையில் தாயும் மகளும் அருகருகே சென்றால், சகோதரிகளா! என்று ஐயுறும் வண்ணம் தம்மை அழகுபடுத்தத் தாய்மார்கள் இறங்கிவிட்டார்கள். அடுக்களையும் சமையலும் குடும்பச்சுமையுமே வாழ்க்கை என்று வாழும் வாழ்க்கை எதற்கு! உலக வளர்ச்சியில் முன்னிலையில் இடம் பிடிக்கும் பெண்கள், அழகுக் கலைக்கு முக்கிய இடத்தைக் கொடுக்கின்றனர். இப்படி இருக்க வாசகர்களே! நீங்கள் மட்டும் ஏன் அழகான பெண்களைப் பார்த்துப் பெருமூச்சு விடவேண்டும். வாருங்கள். எளிமையான முறையிலே அழகைப் பேணும் முறையை உங்களுக்காகப் பெற்றுத் தர நான் இருக்கின்றேன். 


            அழகைப் பராமரிக்க உடலழுகு மட்டும் போதுமா? உளமும் அழகு பெற வேண்டும் அல்லவா? உடலும் ஆரோக்கியம் பெற வேண்டும் அல்லவா? எனவே நோய்கள் தடுப்பதற்குரிய ஆலோசனைகளும் இங்கே அவ்வப்போது உங்கள் கண்களுக்கு முன் வந்து விழும். அதனூடும் பயன் பெறுங்கள். சில மருத்துவக் குறிப்புக்களும் பார்த்து மகிழலாம். எல்லாவற்றிற்கும் முன் உங்கள் ஊக்கமும் ஆலோசனையும் வரவேற்கப்படுகின்றது. 


அன்புடன்


சந்திரகௌரி சிவபாலன்