Pages

Sunday, June 26, 2011

முகத்தில் ஏற்படும் சுருக்கம்

                                   

முகத்தில் ஏற்படும் சுருக்கம்

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் முதுமை என்பது முடிவு. அந்த முதுமையிலும் இளமையாக இருக்கப் பலரும் விரும்புவார்கள். எமது பழக்கவழக்கங்கள், நோய், கவலை போன்றவை இளமையிலேயே முதுமையைக் கொண்டுவந்துவிடுகின்றது. மனதால் நாம் இளமையுடன் இருக்கவேண்டும் என்ற கருதுபவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி, உணவுப்பழக்கவழக்கங்களில் முழுக்கவனம் எடுக்கவேண்டியது அவசியமாகின்றது. முதுமை வந்துவிட்டால் எமது தோலில் தளர்ச்சி ஏற்பட்டு சுருக்கங்கள் விழத் தொடங்கிவிடும். ஆயினும் முதுமை ஏற்படாமலே சுருக்கங்கள் எமது முகங்களில் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. நாங்கள் பேசுகின்றோம் இதைவிட எங்களுடைய முகமானது சிரிப்பு, அழுகை, கவலை, போன்ற பலவிதமான உணர்ச்சிப்பிரதிபலிப்புக்களை எடுத்துக் காட்டுகின்றது. அப்போது எண்ணற்ற தசைகள் இதற்கான தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்றன.
   
அதிகபதட்டம் கொள்ளுகின்ற போது எமது தசைகள் வலுவாக உழைக்கவேண்டி ஏற்படுகின்றது. இதுபோலவேதான் கோபப்படுகின்ற போதும் தசைகள் கூடுதலாகத் தொழிற்படுகின்றன. இதனாலேயே ''அதிகம் கோபப்பட்டாயானால், விரைவில் வயது போய்விடும்'' என்பார்கள். தோலின் ஓய்வுக்கு உடலின் இழுபடுகின்ற தசைஇழையங்கள் தேவைப்படுகின்றன. இது அமினோவமிலத்தினால் ஆக்கப்படுகின்றது. கடங்து வரும் காலங்களில் இந்த அமினோவமிலம் தோலுக்குக் குறைவாகக் கிடைக்கின்ற போது தோல் குறைவான நெகிழ்வடையும் தன்மையைப் பெறுகின்றது. இதனால், நாம் முதுமையiகின்றோம். உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன. இச்செயற்பாட்டை நம் கண்களால் காணமுடியாது. ஆனால், எமக்கு நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றது. எமது கடந்தகாலப் புகைப்படங்களையும் தற்போதைய புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இதனை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

அளவுக்கு மீறி தசை இழுபடுவதற்குரிய காரணங்கள்:

புகைப்பிடித்தல், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம், அதிகூடிய அமினோவமிலம் கொண்டிருத்தல்

வாழ்நாளில் முகத்தசைகளுக்குத் தேவைப்படுகின்ற ஓய்வை வழங்கும் இழைகள் குறைந்த வலிமையுடன் காணப்படல்.

வாழைப்பழ மாஸ்க் தயாரித்தல்

ஒரு பழுத்த வாழைப்பழம்
ஒரு மேசைக்கரண்டி றோஸ்வாட்டர் ( Rose Water)
வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் றோஸ்வோட்டரைக் கலக்க வேண்டும்.  இந்த குழையலை( Mask) முகத்தில் நன்றாகப் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்தபின் நகச்சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். தினமும் இதனைப் பயன்படுத்தினால் முகச்சுருக்கத்தைக் குறைக்கலாம்.

இதைவிட தற்போது முகச்சுருக்கத்திற்கு எதிரான(Anti falten creme, Anti - wrinkle Cream) கடைகளில் விற்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.



14 comments:

  1. முகசுருக்கம் பற்றி விளங்கிக்கொண்டேன்

    ReplyDelete
  2. சுருக்கமாய் சொன்னாலும் அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  3. vaasiththean
    nalla pakirvu
    nanrikal

    ReplyDelete
  4. வருகை தந்து பகிர்வுகளைப் பார்த்து உங்கள் பக்கப் பார்வைகளை மனமுவர்ந்து அளித்தமைக்கு அனைவருக்கும் நன்றிகளைப் பகர்கின்றேன்.

    ReplyDelete
  5. நண்பர்களே நம்ம பக்கம் மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம் !!!!நீங்களும் யோசித்து பாருங்களேன்

    ReplyDelete
  6. வனப்பில் வரும் விபரங்கள் யாவும் பயனே ! நன்றிகள் பகிர்வுக்கு !!

    ReplyDelete
  7. Best wishes for giving tips to our sisters. Visit my blog www.hellovenki.blogspot.com and comment please

    ReplyDelete
  8. அன்புடையீர்
    வணக்கம்
    என் வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி
    மனித இனம் குறிப்பாக பெண்ணுலகம்
    அறிய வேண்டிய அரிய பதிவுகளை போடும்
    தங்களை மிகவும் பாராட்டுகிறேன்
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.... so...உள்ளம் நன்றாக இருந்தாலும்.... முகத்தையும் பேணுவோம்... அகம் பாதி முகம் பாதி.... நல்ல பதிவு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. அருமையான தகவல் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. வணக்கம் அம்மா இன்றுதான் உங்கள் தளத்தில்
    என்னால் கருத்துரை இட முடிகிறது .மிக்க மகிழ்ச்சியாக
    உள்ளது.தங்களின் அருமையான பயனுள்ள தகவலைப்
    பலமுறை படித்துள்ளேன்.அருமையான தகவலைத்
    தொடர்ந்தும் வழங்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த
    நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!..........

    ReplyDelete
  12. வணக்கம் அம்மா இன்று என் தளத்தில் உறவுகளால்
    வஞ்சிக்கப்பட்ட ஒரு அவலைப் பெண்ணின் கண்ணீர்கொண்டு ஒரு பாடலை படைத்துள்ளேன். இதற்கு உங்கள் கருத்தினையும்
    பணிவன்போடு எதிபார்க்கின்றேன் மிக்க நன்றி ....

    ReplyDelete