Pages

Sunday, September 16, 2012

தலை மயிருக்கு நிறம் தீட்டுதல்




தலைமயிர் ஒரு மனிதனுக்கு அழகைக் கொடுக்கின்றது என்பது உண்மையே. ஆனால் அதனை நாம் கவனமாகப் பராமரிக்காதுவிடில் அது எம்மைவிட்டு மெல்ல மெல்ல அகன்றுவிடும். அது பற்றி வேறு ஒரு ஆக்கத்தில் தந்துள்ளேன். ஒரு மனிதனுக்கு தலையிலே ஏறக்குறைய 1 இலட்சம் மயிர்கள் உள்ளன. ஒவ்வொரு மயிரும் கிரடின் என்ற புரதப் பொருளினால் ஆனது. இம்மயிர்களின் நிறம் வெள்ளையாகும். ஆனால் தோலிலுள்ள மெலனின் என்று அழைக்கப்படும் தோலிலுள்ள நிறமூட்டியே இத் தலைமயிர்களுக்கு நிறத்தைக் கொடுக்கின்றது. இது 20 வயதிற்குப் பின் உற்பத்தியில் குறைய ஆரம்பிக்கும். அதனையே நரை என்கின்றோம். சிலருக்குச் சிறு வயதிலேயே நரை தோன்றுகின்றது. மஞ்சட் காமாலை, அம்மை, மலேரியா, கதிர்வீச்சு, தைரோயிட்சுரப்பி அதிகரிப்பு, நீரழிவு, இரப்பை, குடல்நோய்கள், இரத்தச்சோகை, போசாக்கின்மை போன்ற காரணங்களினால் இளமையிலேயே சிலருக்குத் தலைமயிரில் நரை தோன்றுகின்றது. 
           
           எனவே இப்போது வகைவகையான தலைச்சாயங்கள்  உற்பத்தியில் வந்துள்ளன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வெள்ளைமுடிகளை எமக்கு விரும்பிய முறையில் மாற்றியமைக்கலாம். 
தலைமயிருக்கு நிறம் தீட்டுவதற்கு முன் உடலின் ஒரு சிறு பகுதியில்  பூசிப்பார்த்தல் வேண்டும்.

எவ்வாறான நேரங்களில் நிறம் பூசக்கூடாது.

1. மாதவிடாய் இருக்கின்ற காலங்களில் 

2. பாலூட்டும் தாய்மார்கள் 
3. கர்ப்பம் தரித்திருக்கின்ற காலங்களில்
4. தோல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற போது 
5. ஆஸ்துமா, இதயநோய்கள், சிறுநீரக குறைபாடுகள் இருக்கின்ற போது 
        பயன்படுத்தக் கூடாது.
6. சாயம் ஒரு சிறிய பகுதியில் பூசிப் பார்க்கின்ற போது எரிச்சல் ஏற்பட்டால்,  
        பயன்படுத்தக் கூடாது.
7. தலைமயிர் கொட்டுகின்ற போது

        இவ்வாறான சமயங்களில் தலைமயிருக்கு சாயம் பூசுவதைத் தவிர்த்துக் கொண்டால் நல்லது.