Pages

Wednesday, February 2, 2011

Serviette( Napkin) அலங்காரம்



அழகு எங்குதான் இல்லை. அழகுணர்ச்சி இல்லாத மனிதர்கள் யார்தான் இருக்கின்றார்கள். உடுக்கின்ற உடை, உண்கின்ற உணவு, இருக்கின்ற இடம், படுக்கின்ற படுக்கை, படிக்கின்ற மேசை, பார்க்கின்ற இடங்கள் என்று எதை எடுத்துப் பார்த்தாலும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பார் இவ்வுலகில் இல்லை என்றே சொல்லிவிடலாம். உலகை வெறுத்து வாழும் சந்நியாசிகளை இவ்விடத்தில் நான் குறிப்பிடவில்லை. ஆனால், அவர்கள் கூட ஆண்டவனை அழகுபடுத்திப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவ்வாறு அழகுணர்ச்சி இருக்க நாம் உண்ணுகின்ற உணவு அளவோடு உண்பதும் அழகு, அதை அழகோடு உண்பதும் சிறப்பே. உள்ளத்து அழகு, உடல் அழகு என்பதற்கேற்ப, நாம் இருந்து உண்ணுகின்ற மேசையில் வைக்கப்பட்டிருக்கும் கைதுடைக்கும் கடதாசியை அல்லது கைதுடைக்கும் துணியை (Serviette) எவ்வாறு அலங்கரித்து வைத்து மேசையை அழகுபடுத்தலாம் என்பதை இப்போது பார்ப்போம்.






முதலில் கைதுடைக்கும் கடதாசியை மேலிருந்து கீழாக இரண்டாக மடியுங்கள் பின் அதன் மேல் அரைப்பகுதியை கீழ்நோக்கி அரைவாசியாக மடியுங்கள். கீழ் அரைப்பகுதியை கால்வாசியாக மடியுங்கள். 






இப்போது கீழுள்ள பகுதியை மேலுள்ள பகுதியின் மேல் மடியுங்கள். இப்படி மடிக்கின்ற போது மேல்பகுதி சிறிதளவு தெரியும் படியாக மடிக்க வேண்டும். 




இப்போது இந்தக் கடதாசியை Accordion  போல் மடித்தெடுங்கள்






இப்போது கடதாசியைக் கையில் எடுத்து படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் கீழையுள்ள உள்ப்பகுதியில் இருக்கின்ற மூலைப்பகுதிகளை கீழ் நோக்கி இழுங்கள்.




இப்போது மேலேயுள்ள மூலைப்பகுதிகளை பின்பக்கமாக இழுத்து மடித்துவிடுங்கள்.





இப்போது கீழுள்ள முடிவுப்பகுதியை ஒன்றாக இணைத்து ஒரு ரிபனால் அழகாகக் கட்டுங்கள். 


வீருந்தினர்களை வீட்டிற்கு அழைக்கும்போது இவ்வாறு மேசை அலங்காரம் செய்து வைக்கின்றபோது விருந்தினரும் மனமகிழ்ந்து உணவை உருசிப்பார்கள். செய்துபாருங்கள் முடிவுகளைத் தெரியப்படுத்துங்கள்.