ஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உணவுல்லாத ஒரு உணர்வு ஆசியநாட்டவர்களிடையே இருக்கின்றது. அவர்கள் அத்தியாவசியமான முதல் உணவு அரிசிச்சோறாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மொறக்கோ, துருக்கி, ஆபிரிக்கா, போலந்து, இவ்வாறு பலதரப்பட்ட நாட்டுமக்களுடன் ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் பழகும்போது அவர்களுடைய தேசியஉணவுகளையும் சுவை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அவ்வாறு சுவை பார்க்கின்ற வேளையிலும் தமது தேசியஉணவை அவர்கள் மறப்பதில்லை.
அதுபோல் இங்கு வளருகின்ற இளந்தலைமுறையினர் எவ்வாறான உணவுகளை விரும்பினாலும், எமது தேசியஉணவை கூடுதலாக விரும்புகின்றனர். ஒவ்வொருநாளும் விரும்பி உண்ணவில்லையானாலும், எமது உணவில் பிடிப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால், தற்போது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலேயே சோறை வெறுத்து பிட்ஷா, ஹம்பேகர் போன்ற உணவுகளுக்கு இளந்தலைமுறை அடிபணிந்து வாழ்வது அறியக்கூடியதாக இருக்கின்றது. போசாக்கின்றி உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற இவ்வுணவுகளை உண்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இவர்கள் நினைத்துப் பார்பதில்லை. இவ்வுணவுவகைகள் Fastfood என்ற பெயரில் Fast ஆக எமது உடலைப் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
அளவுக்கதிகமாக சோற்றை உண்பதுடன் சாப்பிட்டவுடன் ஒரே இடத்தில் அசையாது இருந்து தொலைக்காட்சிகளைப் பார்ப்பது, உண்டவுடன் நீண்ட நேரம் நித்திரை செய்வது போன்ற காரணங்களாலேயே இதிலுள்ள மாப்பொருள் உடற்பருமனை ஏற்படுத்துகின்றது
அரிசிச்சோறு ஒரு மாப்பொருள் உணவு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வரிசிச்சோறானது சுகாதார மேம்பாட்டுப் பண்புகளைக் கொண்டது. இதில் ஆரோக்கிமற்ற கொழுப்பு காணப்படாது. இதில் புரதம், விற்றமின், கனிப்பொருள்கள் காணப்படுகின்றன. இதில் விற்றமின்கள் B1.B6 போன்றவை இருக்கின்றன. பி1 நரம்புகளுக்கும், வளர் தசை மாற்றத்திற்கு பி6 தோலுக்கும், இரத்தம் உடலில் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.
பியோட்டின் பொட்டாசியம், துத்தநாகம் போன்றவையும் இதில் காணப்படுக்கின்றன. பியோட்டின் தலைமயிருக்கும் நகத்திற்கும், பொட்டாசியம் இரத்தஅழுத்தத்தை சீராக்குவதற்கும், துத்தநாகம் குளிரான சமயத்தில் உடல் வெப்பநிலையைப் பாதுகாப்பதற்கும், நோய்எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இதில் காபோவைதரேற்று அதிகம் உண்டு. அதிகநேரம் பசியைத் தாக்குப்பிடிக்கும் சக்தி சோற்றுக்கு உண்டு. இது இலகுவில் சமிபாடடையும் தன்மையுள்ளதால் வயிறு குடல் சம்பந்தமான நோயுள்ளவர்களுக்கும் சோறு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது. அரிசிச் சோறு தேவையில்லாத உடலுக்குள் இருக்கும் நீரை வெளியகற்றும் சக்தி கொண்டது. அதனால், உடலினுள் உள்ள நஞ்சுப் பொருள்கள் சிறுநீராக சிறுநீர்ப்பை ஊடாக வெளியகற்றும்.
இவ்வாறான சிறப்புகள் கொண்ட எமது தேசிய உணவை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.
பயனுள்ள தகவல்... நன்றி...
ReplyDeleteபழைய சோற்றைத் தின்றுவிட்டு நாளெல்லாம் வயற்காட்டில் மாங்கு மாங்கென்று வேலை பார்க்கும் உழைக்கும் வர்க்கத்தினரைப் பார்த்தாவது நாம் சோற்றின் அருமையை உணரவேண்டும். சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசியைத் தவிர்த்து பழுப்பரிசி அல்லது பாசுமதி அரிசிச்சோறு சாப்பிடுவது மிகவும் நல்லது.
ReplyDeleteநல்லதொரு பகிர்வுக்கு நன்றி சந்திரகௌரி.
அரிசிச் சோறு தேவையில்லாத உடலுக்குள் இருக்கும் நீரை வெளியகற்றும் சக்தி கொண்டது. அதனால், உடலினுள் உள்ள நஞ்சுப் பொருள்கள் சிறுநீராக சிறுநீர்ப்பை ஊடாக வெளியகற்றும்.
ReplyDeleteஇவ்வாறான சிறப்புகள் கொண்ட எமது தேசிய உணவை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.//
அருமையான் விழிப்புண்ர்வு பதிவு.
உடல் உழைப்புக்கு ஏற்ற உ?னவு தான் சோறு, அதுவும் கீதமஞ்சரி சொல்வது போல் பழைய சோற்றின் தண்ணீரில் அவ்வளவு சத்து உள்ளது என்று வெளி நாட்டினர் ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்கிறார்கள்.
அருமையான பதிவு
ReplyDeleteஅப்பாவை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதைப்போல
அரிசி உணவின் அருமையை தமிழர்களுக்கு
உணர்த்தவேண்டிய சூழல் பாஸ்ட் ஃபூட் உணவால்
ஏற்பட்டிருப்பது நிகழகாலச் சோகம்
சரியான நேரத்தில் அருமையான பதிவை விரிவாக
அருமையாக பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
வணக்கம் அக்கா...
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
அதற்கான சுட்டி இதோ....
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html
நன்றி.
நட்புடன்
மனசு சே.குமார்
வணக்கம்
ReplyDeleteபதிவு அருமை வாழ்த்துக்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.. கூடுதல் தகவல் எனக்கும் நினைவுக்கு வருகிறது சாதம் என்று சொல்ல கூடாது சாப்பாடு என்பது தமிழ்ச்சொல் என்பார்கள் காரணம் சாகும்வரை பாடுபட்டு சாப்பிட வேண்டும் என்பதால்
நம் உணவுப்பழக்கம் திட்டமிட்டு மறக்கடிக்கப்படுகிறது,
ReplyDeleteஉண்மை தான் வெள்ளை அரிசி வேண்டாம் என்றால்
ReplyDeleteநாம் அரிசியே வேண்டாமென்று கான்ப்லேக்ஸ் நாடி
ஓடுகிறோம் .பயனுள்ள பதிவு !
பயனுள்ள தகவல்கள். சரியான நேரத்தில் அருமையான பதிவை விரிவாக அருமையாக பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவணக்கம். தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_24.html
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது முதலில் வாழ்த்துக்கள்... சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_24.html?showComment=1390519247701#c4761600294553611110
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுருக்கமான ஆனால் அருமையான பதிவு
ReplyDelete