Pages

Wednesday, November 10, 2010

சருமம் அழகு பெற

                                                                         தோல்



எமது உடலின் பல்வேறுபட்ட உறுப்புக்களையும் போர்த்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பரப்பளவுள்ள ஒரு பகுதி தோல் ஆகும். இத்தோலின் தடிப்பு 1 மி.மீற்றர். மேல்த்தோல் 4 அடுக்குகளையுடையது. மெலனின் அளவைப் பொருத்துத்தான் தோலின் நிறம் ஒவ்வொருவருக்கும் அமைகின்றது. மெலனின் அதிகம் சுரப்பவர்கள் கறுப்பு நிறம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். தொடுகை உணர்வு, உடல் வெப்பநிலையைப் பாதுகாத்தல், விற்றமின் D ஐத் தொகுத்தல்,  விற்றமின் B ஐப் பாதுகாத்தல் போன்ற தொழிற்பாடுகளைத் தோலானது செய்கின்றது. தோலிலே எண்ணெய்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இந்த எண்ணெய்ச் சுரப்பிகள் ஒவ்வொரு மயிர்க்கால்களுக்கும் தோலுக்கும் எண்ணெயைத் தருகின்றது. இது தோல் காய்ந்து போகாமல் பளபளப்பாக இருக்க உதவுகின்றது. தோல் அழகாக இருந்தால் உடலும் முகமும் பொலிவாகத் தெரியும் அல்லவா!


முகம் பளிச் என்று இருப்பதற்கு:


சிறிதளவு கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுங்கள் அதற்குள் 2, 3 சொட்டு எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து விடுங்கள். இந்தக் கலவையினுள் சிறிதளவு பால் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பரவலாகப் பூசிக் காயவிடுங்கள். நன்றாகக் காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவுங்கள். முகம் பளிச்சென்று இருக்கும்.


இதேபோல் பயற்றம் மாவை நீரில் அல்லது பாலில் குழைத்து உடலில் தேய்த்துக் குளித்து வர உடல் பொலிவு பெறும்.


முகத்துக்கு எலுமிச்சம் பழச்சாற்றைத் தினமும் பூசி வருகின்ற போது முகத்தில் வளருகின்ற தேவையற்ற முடிகள் நீக்கப்படும்.


கூர்க்கனை வெட்டி அதன் சாற்றை முகத்தில் பூசி வர முகம் குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்.


இவை எல்லாவற்றிற்கும் முன்னோடியாக முகத்தை அடிக்கடிக் கழுவித் துப்பரவாக வைத்திருப்பது அவசியம். இன்று இது போதும் என்று நினைக்கின்றேன். தொடர்ந்து மேலும் தகவல்களை உங்கள் ஆதரவோடு தொடர்கின்றேன்.

4 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுல்ள அருமையான எளிமையான் குறிப்புகள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete