Pages

Thursday, December 23, 2010

கீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்



முருங்கைக்கீரை:

சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும்.
பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்.

முளைக்கீரை:

இது வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, மாலைக்கண்நோய், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, பல் சம்பந்தமான நோய்களுக்குப் பலன் தரும் கீரையாக இருக்கின்றது.

பொன்னாங்கண்ணிக்கீரை:

கண் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. சூடான உடல் உள்ளவர்களுக்கு குளிர்மையைக் கொடுக்கும். தோல் சுரக்கத்தை நீக்கும்.

வெந்தயக் கீரை: 

அறிவுக்குத் தெளிவ தரும் கீரை. உடல் சுறுசுறுப்பைக் கொடுக்கும். பலம்தரும். சமீபாட்டுக் கோளாறுகளை நீக்கும்.

அகத்திக் கீரை:

மலச்சிக்கலை நீக்கி சமிபாட்டுத் தொல்லைகளை நீக்கும். மூளைக்கோளாறுகள் நீங்கும். இதில் சுண்ணாம்புச்சத்துக்கள் நிறைய இருக்கின்றது.

கொத்தமல்லிக்கீரை:

மூளை, மூக்கு, சிறுநீரகம் சம்பந்தமான சகல வியாதிகளையும் நீக்குகின்றது. எலும்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றது.

 நன்றி சித்தமருத்துவக்குறிப்புக்கள்

5 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல்

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல்கள்...! பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  3. தோழி...இந்த word verification கேட்பதை எடுத்து விடுங்கள்....மற்றவர்கள் கமெண்ட் கொடுப்பதற்கு சுலபமாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  4. தோழி,
    பயனுள்ள தகவல். மேலே கூறிய ஆலோசனையை வழிமொழிகிறென்.

    ReplyDelete
  5. எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. தெரிந்தால் விளக்குவீர்களா? நன்றி

    ReplyDelete