உலகம் தன் வளர்ச்சிப் போக்கை துரிதப்படுத்தியுள்ளது. அழகும் அறிவும் அதிவேகமாக முட்டி மோதி உலகில் முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன. அழகை மேம்படுத்துவதற்காக மக்கள் எல்லோரும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். யாருக்குத்தான் தான் அழகான இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. பருவமாற்றம் கண்ட பெண்கள் தம்முடைய முகச் சுருக்கங்கள் மறைப்பதற்குப் பலவிதமான முகப்பூச்சுக்களை நாடிவிட்டார்கள். இந்நிலையில் தாயும் மகளும் அருகருகே சென்றால், சகோதரிகளா! என்று ஐயுறும் வண்ணம் தம்மை அழகுபடுத்தத் தாய்மார்கள் இறங்கிவிட்டார்கள். அடுக்களையும் சமையலும் குடும்பச்சுமையுமே வாழ்க்கை என்று வாழும் வாழ்க்கை எதற்கு! உலக வளர்ச்சியில் முன்னிலையில் இடம் பிடிக்கும் பெண்கள், அழகுக் கலைக்கு முக்கிய இடத்தைக் கொடுக்கின்றனர். இப்படி இருக்க வாசகர்களே! நீங்கள் மட்டும் ஏன் அழகான பெண்களைப் பார்த்துப் பெருமூச்சு விடவேண்டும். வாருங்கள். எளிமையான முறையிலே அழகைப் பேணும் முறையை உங்களுக்காகப் பெற்றுத் தர நான் இருக்கின்றேன்.
அழகைப் பராமரிக்க உடலழுகு மட்டும் போதுமா? உளமும் அழகு பெற வேண்டும் அல்லவா? உடலும் ஆரோக்கியம் பெற வேண்டும் அல்லவா? எனவே நோய்கள் தடுப்பதற்குரிய ஆலோசனைகளும் இங்கே அவ்வப்போது உங்கள் கண்களுக்கு முன் வந்து விழும். அதனூடும் பயன் பெறுங்கள். சில மருத்துவக் குறிப்புக்களும் பார்த்து மகிழலாம். எல்லாவற்றிற்கும் முன் உங்கள் ஊக்கமும் ஆலோசனையும் வரவேற்கப்படுகின்றது.
அன்புடன்
சந்திரகௌரி சிவபாலன்
No comments:
Post a Comment