Pages

Sunday, February 10, 2013

வீட்டு வைத்தியம்



1. வீட்டில் இருமல், தடிமல்  தொல்லைகளுக்கான கைவைத்தியம்

அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரித்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவும். பின் ஒரு துணியால் மார்புப் பகுதியைச் சுற்றிக்கட்டவும். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவும்.

2. தடிமல்:

ஒரு லீட்டர் கொதித்த நீரை  ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்
போல்)

3. காதுவலி:

வெங்காயத்தை வெட்டி ஒரு தாய்ச்சியில் சூடாக்கவேண்டும். பின் ஒரு துப்பரவான துணியில் இச்சூடாக்கிய வெங்காயத்தைக் கட்டி வலியுள்ள காதின்மேல் மேல் வைக்கவும். ஒரு மணித்தியாலங்கள் அளவில் அப்படியே இருக்க விடவும்.

4. தொண்டைநோ:

ஒரு துணியில் தயிரை நன்றாகப்பிரட்டவும். இல்லையென்றால் ஒரு துணியை தயிரில் அழிழ்த்திப் பிழிந்து எடுக்கவும். கழுத்தைச் சுற்றி இத்துணியைப் போடவும். பின் வேறு ஒரு துணியை அதன் மேல் சுற்றி நீண்டநேரம் விடவும்.

5. காய்ச்சல்:

இரண்டு துணிகைளை சாதாரண தண்ணீரில் துவைத்து எடுக்கவும். அந்நீரைப் பிழிந்து எடுத்த துணியை முழங்காலின் கீழ்ப்பகுதி பாதம் இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில்  இரண்டு கால்களிலும் சுற்றிவிடவும். 10, 15 நிமிடங்கள் குளிரவிடவும். பலதடவைகள் இதைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்.

Thanks to Vigo magazin

15 comments:

  1. மி்கவும் பயனுள்ள கை வைத்தியத் தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்ரி சார்

      Delete
  2. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்புகள். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  4. பயனுள்ள வீட்டு வைத்தியம்.

    ReplyDelete
  5. நல்ல தகவல் .வனப்பாய் இருக்க எல்லோருக்குமே பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பிடிக்கும்

    ReplyDelete
  6. நல்லதொரு வீட்டு வைத்திய குறிப்புகள் கெளரி..

    ReplyDelete
  7. பயனுள்ள மருத்துவக் குறிப்பு இதற்க்கு என்
    நன்றியும் வாழ்த்துக்களும் .தொடர்ந்தும் இது போன்ற
    நல்ல பயனுள்ள பகிர்வுகளை உங்களிடம் இருந்து
    எதிர்பார்க்கின்றேன் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. பயனுள்ள மருத்துவக் குறிப்பு...
    நல்ல தகவல்.

    ReplyDelete
  9. உங்க வலையே இப்பதாங்க கணக்காயர் வலையிலே பாத்து வந்தேங்க..

    உங்க வலைக்கு ஏன் வந்தேன் அப்படின்னு கேட்கறீக இல்லையா..
    என்னோட மூத்த பொண்ணு பேரும் கௌரிதானுக..
    சந்திர கௌரி இல்ல...அது செயகௌரிங்க..

    ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி வரட்டு இருமல் வந்து படாத பாடு படுத்திடுங்க..
    இங்க்லீஷ், ஆயுர்வேதம் அப்படின்னு வூடு முழுவதுமே மருந்து பாட்டிலு.
    சூரணம் லேகியம் குளிகை எல்லாமே வூடெ ஒரு நாட்டு மருந்து கடை மாதிரி போச்சுங்க..

    நீங்க சொல்ற வைத்தியம், அதாங்க...உருளைக்கிழங்கை கொதிக்க வச்சு மார்பு மேல வச்சு
    துணிய சுத்தி கட்டறது....

    நிசமாவே சரியாகுங்களலா...?????? !!!!!



    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  10. எளிய அருமையான குறிப்புகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. ஆயிரமாவது பதிவுக்கு
    வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

    ReplyDelete
  12. அருமையான கை வைத்திய குறிப்புகள்.
    நன்றி சந்திர கெளரி.

    ReplyDelete
  13. கை வைத்தியம் கை வசம் இருப்பது எவ்வளவு நல்ல விடயம்.
    தெரிந்து வைத்திருப்பது அவசியமே. இதனால் நோயின் வாதை அலைச்சல் பணச் செலவு எல்லாவற்றையும் தவிர்க்கலாம்.

    அருமையான பகிர்வு நன்றி தொடரவாழ்த்துக்கள்.....!

    உங்கள்அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  14. நன்றாக உள்ளது.

    ReplyDelete