குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.
என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கல்விக்கு நிகராகக் கல்வியைத்தான் கூறமுடியும். இக்கல்வி தமது பிள்ளைகளுக்கு வாய்க்கப் பெறுவதற்குப் பெற்றோர் தம்மாலான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். கற்பதற்கான வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள். அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடும் பெற்றோர்களும், பிள்ளைகளும் பயன்பட வேண்டுமென்ற குறிக்கோளுடன் இப்பதிவு உங்கள் முன் விரிகின்றது.
யாருக்கும் படிப்பு வரமாட்டாது என்ற நிலை இல்லை. எல்லோராலும் எல்லாம் முடியும். படித்தவிடயங்களை ஞாபகப்படுத்துவதற்கு நிச்சயமாக ஒவ்வொருவரும் படித்தல் வேண்டும். நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சுவைத்தது, நுகர்ந்தது எல்லாமே எங்கள் மூளையில் பதியப்பட்டிருக்கும். முக்கியமான விடயங்களைச் சிறிதுநேரம் கொஞ்சநாளைக்குத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும். பின் நீங்கள் நினைக்காமலே இவ்விடயங்கள் மனக்கண்முன் வந்து நிற்கும். உதாரணமாக தொடர்ச்சியாக நீங்கள் வேலைக்குச் செல்லும் வழியைச் சிந்தித்துப் பாருங்கள். முதல்நாள் முழுக்கவனம் எடுத்துச் சென்ற பாதை இப்போது எப்படி உங்கள் மனதில் பதியப்பட்டிருக்கின்றது என்பதை. இப்படித்தான் படிப்பும் தொடர்ச்சியாகச் செய்கின்ற போது ஆழமாகப் பதிகின்றது. ஒரு விடயத்தை 3 கிழமைக்குப் பயிற்சி செய்தல் மனப்பதிவுக்கு சிறந்த பயிற்சியாகும். இதற்கு மன ஒருமைப்பாடும் அவசியப்படுகின்றது. எந்தவித கடினமும் இல்லாமல் மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுவதை அவதானியுங்கள். இதனை நிமிடக்கணக்கில் செய்யுங்கள். இப்படிச் செய்கின்ற போது வேறு எண்ணங்கள் வந்து தடை செய்யாது. இதைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வாருங்கள். உங்கள் மூளை இலகுவாகும்.
படிக்கின்ற அறையினுள் பகல் வெளிச்சம் போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால், அவ்வெளிச்சம் படிக்கின்ற பிள்ளையின் எதிரே இருக்கக் கூடாது. கூடுதலான வெளிச்சத்தைக் கண்ணுக்குக் கொடுக்கும்போது எங்கள் கண்களினால் மிகவும் பாரத்தைத் தூக்கவிடுகின்றோம். மிக்க இருட்டுள்ள அறையாக இருக்கும் போது வித்தியாசமான ஓமோன்கள் சுரக்கப்பட்டு எமக்குக் களைப்பு ஏற்படுகின்றது. எனவே பொருத்தமில்லாத வெளிச்சம் களைப்பையும் பார்வை இடையூறுகளையும் சிந்தனைக் களைப்பையும் ஏற்படுத்தும். எனவே நேரடியான சூரியவெளிச்சத்தைத் தவிர்த்து சிறப்பான அளவான சூரியவெளிச்சத்தை அறையினுள் வரவிடுங்கள். இடது கைப்பழக்கமுள்ளவர்கள் வலதுபக்கம் இருந்து வெளிச்சம் வரச்செய்வதுடன் வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பக்கம் இருந்து வெளிச்சம் வரும்படியாகவும் ஒழுங்கு செய்யுங்கள். இப்படியாக ஒழுங்குபடுத்தும்போது நிழல் படிக்கின்ற புத்தகங்களில் படியாமல் தவிர்க்கலாம்.
நல்ல காற்றோட்டமுள்ள அறையைத் தெரிவுசெய்ய வேண்டும். அந்த அறையினுள் போதுமான ஒட்சிசன் கிடைக்கப் பெறாவிட்டால், மூளைக்குத் தேவையான ஒட்சிசனை இரத்தம் கொண்டு சென்று கொடுக்காது.
படிக்கின்றபோது நிமிர்ந்து இருக்க வேண்டும். அப்போது மூளைக்குச் சீரான ஒட்சிசன் ஓட்டம் கிடைத்து போதுமான சத்துக்களைப் பெறும்.
சாப்பாட்டு மேசையைப் படிக்கும் மேசையாகப் பயன்படுத்தாதீர்கள்.
படுத்துக் கொண்டு படிப்பதைத் தவிர்க்க வேண்டும். படுக்கின்றபோது உடலுக்கு களைப்பு ஏற்படும். இந்த நிலை படிப்பைத் தாக்கும். இது சமையலறை மேசைபோல் வேறு சிந்தனையைக் கொண்டு வரும்.
நெருக்கமான அறையாக இருத்தல் கூடாது. நெருக்கமான அறை மன ஒருமைப்பாட்டைக் (concentration) குறைக்கும்.
ஒரு போத்தல் தண்ணீரை படிக்கின்றபோது அருகில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் உங்கள் நல்ல நண்பன். நீங்கள் நல்ல உணர்வுகளை இழக்கின்ற போது குடிக்கின்ற தண்ணீரை நல்ல உணர்வுகளைத் தந்து மீண்டும் படிக்கின்ற சூழலுக்கு உங்களைக் கொண்டு வரும்.
சிலருக்கு இசை கேட்டுக் கொண்டு படிப்பது படிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதாகக் கூறுகின்றார்கள். இசையினால் இருபக்க மூளையும் வேலை செய்கின்றது என்பது விஞ்ஞானிகள் கருத்து. அமைதியான பின்புல இசை கணிதம் செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. தயவுசெய்து ஆக்கிரமிப்பான ஒலிகளைப் படிப்பின்போது பயன்படுத்த வேண்டாம். தியானம் செய்வதற்குப் பயன்படுத்தும் இசை நல்லதல்ல. இது எங்கள் மூளையிலுள்ள சிந்திக்கும் தன்மையைச் செயல்படுத்த மாட்டாது. ர்ip ர்ழி இசை கற்கும் முயற்சியைத் தடுக்கும் அல்லது நிறுத்திவிடும். வானொலியைச் சிறப்பு என்று கூறமுடியாது. அதில் வரும் விளம்பரங்கள் மூளையை வேறுபக்கம் திசைதிருப்பிவிடும்.
நீங்கள் உங்கள் பிள்ளைக்கு இசையுடனா? அல்லது இசையில்லாமலா? கூடுதலான மனஒருமைப்பாடு இருக்கின்றது என்பதை முக்கியமாக அறியவேண்டும். அதன்படியே உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும்.
படுக்கைக்குப் போகும் முன் முக்கியமான பாடம் சம்பந்தமான விடயங்களை ஒலிநாடாவில் பதிந்து கட்டிலில் கேட்டுக் கொண்டு படுத்தல் நல்லது. எங்கள் மூளை அரைநித்திரையில் நன்றாகப் பதிவை எடுத்துக் கொள்ளும்.
மூளையானது 90 தொடக்கம் 120 நிமிடங்கள் ஒரு விடயத்தில் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். அதன்பின் 15 தொடக்கம் 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்தல் சிறப்பு. இந்த நேரத்தில் நீர்குடித்தல், உடல் அசைவை ஏற்படுத்தல், இடையிடையே யன்னலைத் திறந்து ஒட்சிசனை அறையினுள் வருவதற்கு இடம் அளித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடலாம்.
படிக்கின்ற விடயங்களை எழுதிவைத்தல் சிறப்பு. சுருக்கமாக எழுதியவற்றை நாட்குறிப்பேட்டில் அல்லது அடிக்கடிப் பார்வையிடும் பக்கத்தில் எழுதி வைக்கலாம்.
எல்லாவற்றிற்கும் நல்ல மனநிலை தேவைப்படுகின்றது. நல்ல மனநிலை இருக்கும் போதுதான் எங்களுடைய மூளை அன்ரெனா சிறப்பாக வேலைசெய்யும்.
// எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கல்விக்கு நிகராகக் கல்வியைத்தான் கூறமுடியும்.//
ReplyDeleteஅருமை கெளரி..
தங்களின் அறிவுரை அனைத்தும் யாவரும் பின்பற்ற வேண்டியது.
பகிர்வுக்கு நன்றி.
//எல்லாவற்றிற்கும் நல்ல மனநிலை தேவைப்படுகின்றது. நல்ல மனநிலை இருக்கும் போதுதான் எங்களுடைய மூளை அன்ரெனா சிறப்பாக வேலைசெய்யும். //
ReplyDeleteஉண்மையே கௌரி.. இல்லைன்னா, எவ்ளோ நேரம் படிச்சாலும் அர்த்தமில்லை.
கற்றல் வனப்பு பற்றிய மிகவும் பயனுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteசெல்லும் வழி உதாரணம் அருமை
மிக கெட்டிக்காரர்கள் ஒருமுறையென்றால்
அடுத்த நிலையில் உள்ளவர்கள் இருமுறை
அவ்வளவுதான்
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எப்படிப்படிக்கனும்னு அருமையாச்சொல்லிட்டிங்க!
ReplyDeleteஅழகில் உயர்ந்தது கல்வியழகே!
ReplyDeleteசிறப்புக் கட்டுரை
அடடா படிக்கிறதில் இவ்வளவு சமாச்சாரங்கள் அடங்கியிருக்கிறதா?
ReplyDeleteஇப்போதான் புரிந்தது நான் ஏன் இவ்வளவு கொஞ்சமாகப் படித்திருக்கிறன் என்று. என்ன இப்ப கொஞ்சம் Late ஆகத்தான் புரிந்த்தது என்னிலை தப்பில்லையென்று.
இந்தவிசயத்தை என்ரை ஆத்தா அப்பனுக்குச் சொல்லலாமென்றால் இனிநான் மண்டையைப்போட்டுமேலே போனால்தான் உண்டு. நான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்.
பெற்றோருக்கான மிகவும் நல்ல விழிப்புணர்வு தரும் பதிவிற்கு நன்றி.
ReplyDeleteமூளையானது 90 தொடக்கம் 120 நிமிடங்கள் ஒரு விடயத்தில் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். அதன்பின் 15 தொடக்கம் 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்தல் சிறப்பு. இந்த நேரத்தில் நீர்குடித்தல், உடல் அசைவை ஏற்படுத்தல், இடையிடையே யன்னலைத் திறந்து ஒட்சிசனை அறையினுள் வருவதற்கு இடம் அளித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடலாம்.
ReplyDeleteபயனுள்ள அருமையான தகவல் .அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த விடயம் நாம் நிட்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று .மிக்க
நன்றி விழிப்புணர்வு ஊட்டும் இப் பகிர்வுக்கு ...........
பயனுள்ள பகிர்வு....என் தேர்வுக்காக நான் படித்த காலங்களை நினைவு படித்தியமைக்கு நன்றி ...
ReplyDeleteவணக்கம், தங்களிற்கும் தங்கள் குடும்ப உறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் புதிய ஆக்கத்தைக் காண வந்தேன் .நீங்கள்
ReplyDeleteநலந்தானா?..........
உண்மையில் சிறப்பான ஆக்கம் பாட்டுகள்
ReplyDeleteபொருத்தமான நாலடியார் பாடலுடன் ஆரமிபித்து
ReplyDeleteகற்றை பற்றி அருமையான கட்டுரை தற்திருக்கிறீர்கள்.
தண்ணீர் உங்கள் நல்ல நண்பன். நீங்கள் நல்ல உணர்வுகளை இழக்கின்ற போது குடிக்கின்ற தண்ணீரை நல்ல உணர்வுகளைத் தந்து மீண்டும் படிக்கின்ற சூழலுக்கு உங்களைக் கொண்டு வரும். /
ReplyDeleteமிகப்பயனுள்ள ஆக்கம்.. பாராட்டுக்கள்..
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். உங்களின் இன்னொரு தளத்தை போலவே இந்த தளமும் அருமை. அருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள். நன்றி.. சகோதரி!
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
மூளை பற்றிய மிக சிறப்பான பதிவு, ஒரு கைதேர்ந்த மருத்துவரின் அணுகுமுறையோடு எழுதப்பட்ட பதிவி பகிர்வுக்கு நன்றி
ReplyDelete