Pages

Saturday, August 31, 2013

நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்

       

     

        வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு
       பேரிகொண்டு நீர்திரண்டு பெய்ய வேண்டும் - அதுபோல்
       நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்
       நீரழிவு நின்னுடலில் நேரவேண்டும்.



  நீர்நிலைகள், வெள்ளம், கடல், போன்றவற்றிலிருந்து நீரை மொண்டு மேகமானது இருண்டு மழையைப் பொழிய வேண்டும். அதுபோல் நீரை அருந்தி தாகம் நீங்கி நீங்கள் உயிரோடு வாழவேண்டுமென்றால், உங்கள் உடலிலே இருந்து நீர் சரியான முறையில் சிறுநீராகவோ வியர்வையாகவோ வெளியகற்றப்படவேண்டும். இல்லையெனில் உடலெங்கும் நீர் விஷமாக்கப்பட்டு உங்கள் உயிர் உலகத்தைவிட்டு நீங்கிவிடும்.


       நீரழிவு நோய் ஏற்படவேண்டும்.  என்று தப்புக் கணக்குப் போட்டுவிடவேண்டாம்.



             
      

             

6 comments:

  1. உடலிலே இருந்து நீர் சரியான முறையில் சிறுநீராகவோ வியர்வையாகவோ வெளியகற்றப்படவேண்டும். //

    உண்மை, அழகாய் சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நீரையுண்டு தாகமின்றி... அருமையா சொல்லியிருக்கீங்க...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகான அர்த்தமுள்ள வரிகள்..!

    ReplyDelete
  4. /// நீரழிவு நோய் ஏற்படவேண்டும். என்று தப்புக் கணக்குப் போட்டுவிடவேண்டாம்.////

    ஹா....ஹா.....ஹா....

    ReplyDelete
  5. நலம்பாடும் கவிக்கு நல்வாழ்த்துக்கள் சந்திரகௌரி.

    ReplyDelete
  6. நல்லதொரு தகவல். அர்த்தமுள்ள வரிகள்..! பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete