Pages

Saturday, July 30, 2011

முகத்துக்கான பயிற்சிகள்





அழகோ கல்வியோ எதுவானாலும் பயிற்சியின் மூலமே சரியான பலனைப் பெறமுடியும். முகம் பொலிவாகவும் அழகாகவும் இருக்கவும் இரத்தஓட்டம் சிறப்பாக செல்லவும் இப்பயிற்சி முறைகள் பலனைத்தரும்.  

பயிற்சி 1:

உங்கள் வாயை நன்றாக விரித்துத் திறந்து தலையை மெதுவாக பின்புறமாகச் சரித்துக் கொள்ளுங்கள். இப்போது வாயை மூடித்திறந்து கொள்ளுங்கள். இவ்வாறு 10 தடவைகள் செய்யுங்கள். இப்பயிற்சி வாய்க்கும் தாடைக்கும் சிறந்த பயிற்சியாகும்.

பயிற்சி 2:


கண்ணாடிக்கு முன்னால் இருந்தபடி உங்கள் உதட்டை உள்ப்பக்கமாகத் திருப்புங்கள். வாயை இறுக்க மூடியபடி காற்றை உள்ளே அடைத்து வைத்திருங்கள். இப்போது உங்கள் கன்னம் நன்றாக உப்பியிருக்கும். இப்போது ஒவ்வொரு கன்னத்தையும் இரண்டு  விரல்களால் மாறிமாறி அமத்துங்கள். இப்போது இரு கன்னங்களுக்கும் பயிற்சி கிடைக்கும். இதனால் மென்மையான கன்னங்களைப் பெற்றுக்கொள்ளலாம். கவிஞர்களுக்கும் கருச் சேர்க்கலாம்.

பயிற்சி 3 :


உங்கள் மேற்பற்கள், கீழ்ப்பற்கள் இணர்டையும் இறுக்க அழுத்தி உதடை விரியுங்கள். 10 தடவைகள் எண்ணியபின் பழைய நிலைக்கு வாருங்கள். இப்படி 10 தவைகள் செய்யுங்கள். 
இப்பயிற்சிகளை நாள்தோறும் தொலைக்காட்சி பார்க்கும் போது சாதாரணமாகச் செய்து கொண்டிருங்கள். இதற்கென்று நேரம் பொழுது தேட வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாகப் பலனைக் கண்டுகொள்வீர்கள்.
நேரம் கிடைத்தால் இந்த வீடியோ கிளிப்பைப் பாருங்கள்.



11 comments:

  1. //இதனால் மென்மையான கன்னங்களைப் பெற்றுக்கொள்ளலாம். கவிஞர்களுக்கும் கருச் சேர்க்கலாம்.//

    ஆஹா! அப்போ செய்து பார்த்திட வேண்டியது தான். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. முக பயிற்சிக்கான உபயோகமான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. கண்ணாடி முன் நின்று கொண்டு இதையெல்லாம் செய்தேன். தூக்கத்தில் இருந்த விழித்த என் மகன் பார்த்து பயந்து விட்டான் .

    ReplyDelete
  4. முதல் மூன்று பயிற்சிகளையும்
    செய்து பார்த்தேன்
    வித்தியாசம் தெரிந்தது
    நல்ல எளிய பயனுள்ள பயிற்சியை
    அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  5. சிவகுமாரன் அவர்களே! இப்படியே தொடர்ந்து செய்யுங்கள். பயந்த மகன் பின் ஆச்சரியப்படுவார்.

    ReplyDelete
  6. புதிய பயனுள்ள தகவல்

    ReplyDelete
  7. பயனுள்ளப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. நான் செய்து பார்க்கிறேன் ...
    பயனுள்ள பதிவு..
    அன்புடன் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. முதல் முறை வரேன் உங்க பக்கம். எவ்வளவு வயசானாலும் அழகா இருக்கனும்னு தானே எல்லாரும் விரும்புவாங்க. அதிலும் முக அழகுக்கு முக்கியத்துவம்
    மிகவும் அவசியம்தான். உபயோகமான பதிவுதான்.

    ReplyDelete
  10. அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

    ReplyDelete
  11. அழகான முகத்துக்கு
    அழகி சொன்ன பயற்சி
    உதவும்...

    பகிர்வுக்கு நன்றி .
    தொடருங்கள்.

    ReplyDelete