வரட்சியான சருமம்:
நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா? கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். ஒரு கரண்டி ரோஸ் வாட்டர் (Rose Water) அதனுடன் சேருங்கள். பின் இரண்டு துளிகள் கிளிசரின் இந்தக் கலவையுடன் சேருங்கள். நன்றாக மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு போத்தலில் எடுத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வையுங்கள். இக்கலவையை முகத்தில் பூசி அரை மணித்தியாலங்கள் கழிந்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். இக்கலவையை Make upசெய்வதற்கு முன் முகத்தில் பூசலாம். தொடர்ச்சியாகச் செய்து வரவேண்டும். பலன் கிடைக்கும்.
எண்ணெய்ப்பசையுள்ள சருமம்:
ஒரு அப்பிள் பழத்தை எடுங்கள். தோலைச் சீவிய பின் சிறிய துண்டை எடுத்து பசையாக அரைத்து எடுங்கள். அதனை முகத்தில் பூசி அரை மணித்தியாலங்கள் விட்டுப் பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். இக்கலவை முகத்திற்கு போஷாக்காகவும் அமையும்.
கவர்ச்சிகரமற்ற சருமம்:
கவர்ச்சிகரமற்று பொலிவின்றி உங்கள் முகம் காணப்படுகின்றதா? ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்துத் தோல் உரிக்கவும். அதன் சதைப்பற்றான பகுதியை எடுத்துச் சுத்தமான நீரினுள் 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் வடித்தெடுக்கவும். வடித்த சாறானது குளிர்மையடைந்த பின் அதனை ஒரு டழவழைn ஆகப் பயன்படுத்தலாம். உங்கள் முகம் வெல்வெற் போல் காட்சி தரும். வெப்ப அலைகளிலிருந்தும் முகத்தைப் பாதுகாக்கும்.
தொடர்ச்சியாகச் செய்து பாருங்கள் பலன் காண்பீர்கள். ஒரு தடவை செய்து பார்த்துப் பின் பலன் கிடைக்கவில்லையே என என்னைத் திட்டாதீர்கள். அடிக்க அடிக்கத்தான் அம்மியும் நகரும்.
மிக நல்ல ... எளிமையான பயனுள்ள தகவல்... உங்களுக்கு நன்றி.
ReplyDelete