ஒரு அழகான பட்டுப்புடவையைக் கடையில் வாங்குகின்றோம். அதை அழகு மாறாமல் பயன்படுத்துவதற்கு எவ்வளவு முயற்சிப்போம். ஒரு அழகான பொருளை வாங்கினால், அதன் அழகு மாறாமல் எவ்வளவு கவனத்துடன் பாவிப்போம். அதேபோல் எம்மோடு கூட வரும் எமது சருமத்தை எப்படி நாம் பராமரிக்க வேண்டும். அதில் எவ்வளவு கவனத்தை நாம் எடுத்துக் கொள்ளல் வேண்டும். உச்சி தொட்டு உள்ளங்கால் வரை எம்முடைய உடல் முதலில் எமக்கு அழகாகத் தெரிய வேண்டும். எம்மை நாம் முதலில் காதலிக்க வேண்டும். உலகத்தில் பிறந்த அனைவரும் ஏதோ வகையில் அழகானவர்களே. அவ் அழகைப் பேணிப் பாதுகாத்தலே எமது உடலுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனும் மெருகூட்டலுமாக அமைகின்றது. முதலில் தன்னம்பிக்கை மனிதனை வசீகரப்படுத்துகின்றது. நான் என்ன ஐஸ்வர்யாராயா என்னை நான் அழகுபடுத்த என்று எமது பல அம்மாமார்கள் அலுத்தக் கொள்வார்கள். இவ்வாறு நீங்கள் கூறுகின்ற போது உங்கள் அழகில் பாதி குறைந்துவிடும். எனவே நானும் ஒரு அழகி என்னும் நினைப்பே உங்களை ஒருபடி உயர்த்திக் காட்டும்.
ஒரு மனிதனின் உடலில் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு வயதும் ஒரு காரணமாக அமைகின்றது. பருவவயது மாற்றங்கள் அழகில் மாற்றத்தைக் காட்டுகின்றது. ஆனால் அந்தந்த வயதுக்கேற்ற அழகு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அழகான அம்மா, அழகான பாட்டி என்று கூறுவது பற்றி நாம் அறிந்திருக்கி;ன்றோம் அல்லவா. இயற்கையாகவே பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகும் காலங்களில் உடலிலும் உள்ளங்களிலும் பலவகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. எமது வயதுக்கேற்ப நாம் நாள்தோறும் செய்கின்ற உடற்பயிற்சிகள் தசைநார், தோல் மாற்றங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. தளர்வடைந்த தோல்கள் உடற்பயிற்சிகளின் மூலம் இறுக்கமடைகின்றது. எனவே உடற்பயிற்சி உடலுக்குச் சிறந்த பயிற்சியாகும்.
அத்துடன் காலநிலை மாற்றங்களும் தோலகளைப் பாதிக்கின்றன. எனவே காலநிலைக்கேற்ற உசநயஅ வகைகளைப் பாவிப்பதன் மூலம் அதில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதைவிட உங்கள் உடல்வாகுக்கு உணவுப்பழக்கவழக்கம் அவசியமாகின்றது. நாம் உண்ணுகின்ற உணவு உடலினுள் எவ்வாறான மாற்றங்களை அடைகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவுப் பழக்கவழக்கங்களை மேற்கொள்ளலாம். சிலருக்குச் சிலவகை உணவுவகைகள் ஒவ்வாமையாய் இருக்கும். அது உடனடியாக உடலில் மாற்றத்தைப் பிரதிபலிக்கும். எனவே முதலில் எமக்கேற்ற உணவுகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருநாளும் உணவுப்பட்டியல் தயாரிக்கும் போது தேவையான சத்துக்கள் அடங்கிய உணவுவகைகள் வாராவாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சோறு சமைக்கும் அன்று உருளைக்கிழங்கில் கறி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இரண்டும் காபோவைதரேற்று உணவு வகைகளே. அதனால், நன்றாகச் சிந்தித்து உணவுப் பட்டியல் தயார் செய்ய வேண்டும். உணவு வகைகள் எப்படி உண்கின்றோமோ, அதற்கேற்ப அவை சமீபாடடைந்து மலமாக வெளியேற்றப்படல் அவசியமாகின்றது. இல்லையென்றால், தேவையற்ற உடல் உபாதைகள், மலச்சிக்கல் நோய்கள், முகப்பருக்கள் போன்றவை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அளவோடு அவதானமாக உணவு உண்டு அழகோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வோம்.
மலச்சிக்கல் எவ்வாறு ஏற்படுகின்றது:
மலக்குடலை வந்தடையும் உணவிலுள்ள நீர்த்தன்மையும் மலக்குடலின் உட்புறச்சுவரிலுள்ள சளி போன்ற படலமும் சரியான முறையில் இருந்தால், மலம் இலகுவாகப் போகும். மலக்குடல் இந்த மலத்திலுள்ள நீர்த்தன்மையை உறிஞ்சிவிட்டால் மலம் நீர்த்தன்மை அற்று இருக்கும். அப்போது குடல் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும் மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் குணமாக:
1. மலச்சிக்கலுக்குச் சிறப்பான காய் நெல்லிக்காய்
2. பேரீச்சம் பழத்தை இரவில் பாலில் ஊற வைத்து, காலையில் எடுத்துப்
பிசைந்து சாப்பிட மலச்சிக்கல் ஓடி மறைந்துவிடும்.
3. 20 கிராம் பார்லி அரிசியை எடுத்து
அதனுடன் புளிய இலை 40 கிராமைச்
சேர்த்துக் காய்ச்சிக் குடித்துவர
மலச்சிக்கல் மறைந்துவிடும்.
4. தயிருடன் வெங்காயத்தைச்
சிறிதுசிறிதாக வெட்டிப் போட்டு
உண்ணலாம்.
5. கீரைவகைகள் சிறந்தது.
6. Birne என்னும் பழம் மலச்சிக்கலை
நீக்கச் சிறந்த பழமாகும்.
No comments:
Post a Comment