வனப்பின் மகிழ்ச்சியும் விருதும்
நான் முதலில் சிறுகதையின் கோ. சிந்திக்கச் செய்யும் முடிவுரை தருவதில் சிற்பி. தற்போது ஆன்மீக ஸ்லோகங்கள் மூலம் பலரும் பயன் பெறட்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் பிளாக் பணி தொடரும் வை கோபாலக்கிருஸ்ணன்அவர்களுடைய http://gopu1949.blogspot.com
என்னும் பிளாக்
கண்கவர் படங்களுடன் மனதுக்குகந்த ஆன்மீக கதைகளையும் ஆலயங்களையும் எமக்கு அடையாளங்காட்டி தன் சிறந்த படைப்புக்களின் மூலம் பலரைக் கவர்ந்திழுக்கும் இராஐராஐஸ்வரி அவர்களுடைய http://jaghamani.blogspot.com/ என்னும் வலைப்பூ
குழந்தைகள் உலகம் மகத்தானது. அதில் நம்பமுடியாத திறமைகளும் துடிப்புகளும் நகைச்சுவைகளும் நிறைந்திருக்கும். அத்தனையையும் தெரிந்தெடுத்து அவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டி எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என்னும் திடகாத்திரமான நம்பிக்கையை விதைக்கின்ற குழந்தைகள் வழங்கிய அறிவுத் துளிகளை அற்புதமாகப் பட்டியலிட்டுக் காட்டுவது மட்டுமன்றி திருக்குறளுக்கு பஞ்சமே இல்லாது பல கட்டுரைகளை தந்துதவுகின்ற திண்டுக்கல்தனபாலன் அவர்களுடைய http://dindiguldhanabalan.blogspot.com/
தான் பெற்ற அநுபவத்தையும் கண்ட காட்சிகளையும் எடுத்துக்காட்டுவதுடன் அறியப்படாத பல தகவல்களைத் தந்து தன் பயண சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்ற ராம்வி நடத்துகின்ற http://maduragavi.blogspot.com/
அற்புதமான கட்டுரைகள். மனித மனங்களின் அலைபாயும் எண்ணங்கள் அவற்றிற்கான காரணங்கள், அறிவுரைகள் இப்படிப் பலவகையான சுவாரஸ்யமான தகவல்களைக் காவி வருகின்ற Dr.P.Kandaswamy அவர்களுடைய http://swamysmusings.blogspot.com/
இவ்விருது பெற்ற அனைவரும் இவ்வலை உலகில் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று வேண்டிய படி என்னுடைய அன்பு மலர்களை இம்மலர் கொத்துடன் தந்து மகிழ்கின்றேன்.
விருது பெற்றவர்கள் இப்படத்தை உங்கள் பிளாக்கில் இணைத்துக் கொள்ளுங்கள்
நல்ல தேர்வு.
ReplyDeleteவாழ்த்துகள்.
மிக்க நன்றி ஐயா
Deleteவிருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்...
ReplyDeleteஎனக்கும் விருது வழ்ங்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
ReplyDeleteதொடர்ந்து கொள்ளுங்கள் . நீங்கள் மனம்விரும்பியவர்களுக்கும் கொடுத்து மகிழுங்கள்
Deleteஎனக்கு விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி சந்திரகெளரி.
ReplyDeleteதொடர்ந்துகொள்ளுங்கள். உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களைக் காட்டி எங்களுக்கு வழிப்படுத்தி விடுங்கள்
DeleteCG ,
ReplyDeleteஅருமையான தேர்வு.
அழகான படங்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கு என் இதய நன்றி.
மிக்க நன்றி. தொடருங்கள்
Deleteதாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஎனக்குத் தாங்கள் விருது கொடுத்ததற்கு என் அன்பான நெஞ்சார்ந்த நன்றிகள்.
தங்களால் இவ்விருது வழங்கப்பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துகள் + பாராட்டுகள்.
அன்புடன் தங்கள் வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி.
Deleteச்சரியமாகத்தான் இருக்கிறது
ReplyDeleteமகேந்திரன் அவர்கள் எனக்கு விருது கொடுத்தவுடன்
நான் தேர்ந்தெடுக்க வேண்டிய ஐந்து பதிவர்களில்
முதலாவதாக உங்களைத்தான் நினைத்தேன்
நீங்களும் அப்படியே சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது
பதிவுலகில் நீங்கள் , சாகம்பரி அவர்கள் கீதா அவர்கள்
ஒரு பதிவுக்கென எடுத்துக் கொள்ளும் அதீத முயற்சிகள்
சேகரித்துச் சொல்லும் அரிய தகவல்கள் பல சமயம்
என்னை பிரமிக்கவைத்துப் போய்விடும்
விருது பெற்ற தங்களுக்கும்
தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளஅருமையான
நான தொடர்கிற பதிவர்களுக்கும்
எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்
Deleteமுதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி ! எப்போதாவது (நேரம் கிடைக்கும் போதெல்லாம்) பதிவு எழுதும் எனக்கு கிடைத்த முதல் பரிசு ! இன்னும் நிறைய பதிவு எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது ! தொழில், பிசினஸ் என்பதால் முடிவதில்லை. முயற்சி செய்கிறேன் ! இதற்கு மேல் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. சுருக்கமாக நன்றி, நன்றி, நன்றி !
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteமிக்க நன்றி, சந்திரகௌரி.
ReplyDeleteவிருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..
ReplyDeleteதங்கள் விருதிற்கும், தாங்கள் கொடுத்த விருதாளர்களுக்கும் நல் நல் வாழ்த்துகள்.
ReplyDelete(இந்தத் தளத்திற்கு என்னால் வர முடிகிறது)
மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்திரகௌரி. பின்னூட்டங்கள் நமது எழுத்துக்கான உரம் என்றபோதும், கிடைக்கும் பின்னூட்டங்களின் அளவை வைத்து உங்கள் பதிவுகளுக்கான மதிப்பீட்டைக் கணக்கிடவேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். நம் பதிவுகளைப் பலர் படித்துப் பயனடைந்தாலும் பின்னூட்டமிட தயங்கியோ, நேரமின்மையாலோ, வேறு ஏதேனும் தடங்கல்களாலோ நினைப்பதைக் கருத்தில் பதியாமல் செல்ல வாய்ப்புண்டு. எனவே பின்னூட்டங்களை வைத்து மதிப்பிடாமல் தொடர்ந்து பயனுள்ள தகவல்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பதிவுகளால் பயனடைவோர் அதிகம்.
ReplyDeleteவிருது பெற்றமைக்கும் அதைத் தேர்ந்தவர்களுக்கு வழங்கியமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete