Winter இல் தோலைப் பாதுகாத்தல்
உங்கள் தோல் வரட்சியானதாக இருந்தால், சவர்க்காரம் குறைவாகப் பாவித்தல் வேண்டும். வரட்சியான தோலுக்கு Coldcream உம் ஒலிவன் எண்ணெயும் சிறந்ததாக அமைகின்றது. ஆனால், இவற்றைப் பாவிக்கும் முன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். தக்காளிச் சாறு முகத்தைச் சுத்தம் செய்யத் தகுந்ததாக அமைகின்றது. இரவிலே முகத்தைச் சுத்தம் செய்வதற்கு நீரைப் பயன்படுத்தாமல், சூடான நீரினுள் ஒரு சிறிய துவாயை அமிழ்த்தி எடுத்து, நன்றாகப் பிழிந்த பின் முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.
வரட்சியான தோல்:
ஒரு Bucket நீரினுள் ஒரு தேக்கரண்டி ஒலிவன் எண்ணெயைக் கலந்து குளிப்பது வரட்சியான தோல் நீங்கச் சிறந்த வழிமுறையாகும்.
குளிக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு சூடான ஒலிவன் எண்ணெயைப் பூசி மசாஜ் செய்த 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர தோல் பிரகாசமாய்த் திகழும்.
ஒரு தேக்கரண்டி வாதாம்பருப்பு எண்ணெய் 10 தேக்கரண்டி கொதிக்க வைக்காத எண்ணெய் ஒரு விரல்களால் சிறிதளவு கிள்ளி எடுத்த சீனி போன்றவற்றை நன்றாகச் சேர்க்க வேண்டும். அதன் பின் இக்கலவையை ஒரு பஞ்சினால் எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.
Egg Pack
ஒரு முட்டை மஞ்சட் கரு, இரண்டு தேக்கரண்டி ழுசயபெந தரiஉநஇ அரைத் தேக்கரண்டி தேசிப்புளி, சிறு துளிகள் வாதாம்பருப்பு எண்ணெய் போன்றவற்றை நன்றாகக் கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணித்தியாலங்கள் கழிந்தபின் முகத்தைக் கழுவலாம்.
கடலை மா Pack:
ஒரு தேக்கரண்டி கடலை மா, ஒரு சிறிதளவு மஞ்சள், அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி ஒலிவன் எண்ணெய் இவற்றை ஒன்றாகக் கலந்து முகம் கழுத்துப் பகுதிகளுக்குப் பூசி வர நாளடைவில் முகம் பளிச் என்று இருக்கும்.
எண்ணெய் பசையான தோல் உள்ளவர்களுக்கு சிலவேளைகளில் முகப்பருக்கள் தோன்றலாம். கவலைப்படத் தேவையில்லை. முகப்பருக்கள் நீங்கவும் வழிமுறைகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment